இயக்குனர் சசியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு தேதி-நேரம் அறிவிப்பு
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான சசி இயக்கத்தில் விஜய் ஆண்ட்னி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர்  
ஜிவி பிரகாஷ் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது மார்ச் 8ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது.
ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் இந்த படமும் பிச்சைக்காரன் படம் போலவே ஒரு செண்டிமெண்ட் கலந்த படம் என்று கூறப்படுகிறது. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

Leave a Reply