இன்றைய திமுக நிலையை 3 வருடங்களுக்கு முன்பே கணித்த ‘துக்ளக்’ சோ

திமுகவின் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பதவியை பெறுவார் என மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ, கடந்த 2016ஆம் ஆண்டே சரியாக கணித்து ஒரு அட்டைப்படமும் போட்டுள்ளார்.

அதில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகிய மூவரும் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்வது போல் ஒரு விளம்பரம் உள்ளது. இதில் அனைத்து விதமான வியாதிகளும் தீர்க்கப்படும் என்று குறிப்பிட்டு அதில் காவிரி பிரச்சனை உள்பட ஒருசில பிரச்சனைகளை வியாதிபோல் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.,சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, 17-2-2016. என் மானசீக குரு திரு சோ win துக்ளக் அட்டைப்படம் என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply