shadow

இன்று 2வது ஒருநாள் போட்டி: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா

விராத் கோஹ்லி இல்லாத இந்திய அணி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் தொடரை இழக்காமல் இருக்க இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடரை வெனறு சாதனை படைத்துவரும் இந்திய அணி, அந்த பெருமையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் இன்றைய போட்டியின் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டிய நிலை இருக்கும். மேலும் தரம்சாலாவில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு உள்ளது.

நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி முதல் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடியது. தனி ஒருவராக முன்னாள் கேப்டன் தோனி மட்டுமே சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். மோசமான பேட்டிங்கால் வீரர்கள் தேர்வில் கேப்டன் ரோகித் சர்மா மாற்றம் செய்வாரா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply