shadow

இன்று வெளியாகிறது ‘மாரி கெத்து’: ரசிகர்கள் உற்சாகம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்,சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரி 2’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான ‘ரெளடி பேபி பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று அடுத்த சிங்கிள் வெளியாகவுள்ளது.

‘மாரி 2′ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான மாரி கெத்து’ என்ற பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ‘ரெளடி பேபி; பாடலை தனுஷ் எழுதிய நிலையில் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியாகும் ‘மாரி கெத்து’ சமூக வலைத்தளங்களை கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply