இன்று ரெட் அலர்ட்… நாளை ஆரஞ்சு அலர்ட்: 3 நாட்கள் பள்ளி விடுமுறையா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது

குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய நேற்று கனத்த மழை பெய்ததால் பல இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

இந்த நிலையில் ஏற்கனவே இன்று தமிழகத்திற்கு ரெட்அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது

பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இருப்பினும் மழை குறித்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை இருக்கும் எதிர்பார்க்கப்படுவதால் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் இருந்து நாளை காலை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply