இன்று முதல் சென்னை மெட்ரோவில் பாதிக்கட்டணம்: குறைந்தபட்ச கட்டணம் ரூ.5

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பாதிக் கட்டணத்தில் பயணம் செய்யும் முறையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

மெட்ரோ ரயிலில் வார நாட்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுட்துவதால் நல்ல கூட்டம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் விடுமுறை நாட்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் அதிகமான பயணிகளை ஈர்க்க மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய யுக்தியைக் கையாண்டு வருகிறது. இதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பாதிக்கட்டணத்தில் பயணம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி ஸ்மார்ட் கார்ட் வைத்து மெட்ரோவில் பயணம் செய்யும் மக்கள் குறைந்தபட்சமா 4 ரூபாயிலும் , அதிகபட்சமாக 27 ரூபாயிலும் பயணம் செய்ய முடியும். ஸ்மார்ட் கார்ட் இல்லாத பயணிகள், விடுமுறை நாட்களில் குறைந்த பட்சம் 5 ரூபாயிலும், அதிகபட்சமாக 30 ரூபாயிலும் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply