shadow

வங்க கடலில் உருவான என்ற யாஸ் புயல் இன்று கரையை கடக்கிறது. ஒடிசா மாநிலம் பாலாசூர் என்ற இடத்தில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதி தீவிர புயலாக மாறியுள்ள யாஸ் புயல் இன்று கரையை கடக்கும்போது 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது

தற்போது இரு மாநிலங்களிலும் மிக கனமழை பெய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது இன்று நண்பகல் இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது