இனிவரும் எல்லா அஜித் படமும் போனிகபூர் படம்தான்

அஜித் நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் எச்.வினோத் இயக்கும் இன்னொரு படம் என இரண்டு படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனிகபூர், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது

ஆனால் இந்த தகவலை போனிகபூர் தனது டுவிட்டரில் மறுத்தார். அஜித்தை வைத்து ஒரு பாலிவுட் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இரண்டு படங்களுக்கு மட்டுமே இப்போதைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் போனிகபூரில் தயாரிப்பில் நடிக்கும்போது தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும், திருப்தியாக இருப்பதாகவும் அஜித் தரப்பு தெரிவித்துள்ளதால் இனிவரும் அஜித் படங்கள் அனைத்தையும் போனிகபூரே தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply