இனிமேல் தமிழில் பொறியியல் படிப்பு படிக்க முடியாதா? அமைச்சரின் அதிர்ச்சி அறிவிப்பு

இந்தியாவில் தாய் மொழியில் பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு தமிழ்க்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது தமிழ் வழி பொறியியல் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட இடங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 18-ஆவது தமிழ் இணைய மாநாடு தொடக்க விழாவில் கலந்துகொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் வழி பி.இ. படிப்புகளில் சேர மாணவர்கள் போதிய அளவில் ஆர்வம் காட்டாத காரணத்தால், வரும் கல்வியாண்டு முதல் இரு தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கும் ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் குறைக்கப்படும் என தெரிவித்தார்.

தொடக்க காலத்தில் தமிழ் மொழி பொறியியல் கல்வியில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினாலும் தமிழ் மொழியில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் தமிழ் வழி படிப்புகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்தது. இதனையடுத்து தமிழ் மொழியில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

Leave a Reply