shadow

இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.10,000 விலை குறைப்பா?

இந்தியாவில் கடந்த மாதம் எல்ஜி நிறுவனம் வெளியிட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான எல்ஜி ஜி6 விலை இந்திய மதிப்பில் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. மும்பை வர்த்தகரான மகேஷ் டெலிகாம் நிறுவனத்தில் புதிய எல்ஜி ஜி6 ரூ.41,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் எல்ஜி ஜி6 எச்டிசிஎஃப்சி மற்றும் ஸ்டேட் பேங்க் கார்டு கொண்டு வாங்குவோருக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் டோன் ஆக்டிவ்+ HBS-A100 ப்ளூடூத் ஹெட்செட் 50 சதவிகித தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றது.

மெட்டல் வடிவமைப்பு கொண்ட எல்ஜி ஜி6 ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 5.7 இன்ச் ஃபுல் விஷன் 1440×2880 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் டால்பி விஷன் வியூவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் சேவை வழங்கப்பட்டுள்ள எல்ஜி ஜி6 குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, ஆட்டோஃபோகஸ், எல்இடி பிளாஷ் மற்றும் 4K ரெசல்யூஷனில் வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் எல்ஜி ஜி6 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply