இந்த மாதமே ரிலீஸ் ஆகும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’
தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய படம். ஆனால் ஒருசில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருந்தது
இந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் பேசி தீர்க்கப்பட்டு லைகா நிறுவனம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது. இந்த படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா, ஜெகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.