இந்த படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் என்ன சம்பந்தம்?

அறிமுக இயக்குனர் ஆதிசந்திரன் என்பவர் இயக்கத்தில் அறிமுக தயாரிப்பாளர் ஷாம்குமார் என்பவர் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் ‘டோலா’ . இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியது

இந்த படத்தில் நடிகர் ரிஷிரித்விக் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘அட்டு’ என்ற படத்தில் நடித்தவர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு தனது டுவிட்டரில் கூறியதாவது:

‘ஒரு புதிய டீமிடம் இருந்து உருவாகவிருக்கும் இந்த த்ரில் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். அறிமுக தயாரிப்பாளர் ஷாம் மற்றும் அறிமுக இயக்குனர் ஆதிசந்திரனுக்கு உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply