இந்த தவறுக்கு திமுகவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்! முக ஸ்டாலின்

இந்தியாவின் பல இடங்களில் இன்னும் கழிவுகளை மனிதரகளே அகற்றி வரும் நிலையில் இதுகுறித்த சர்வே ஒன்றில் கடந்த 25 ஆண்டுகளில் கழிவுகளை அகற்றும் பணியில் இருப்பவர்கள்அதிகம் மரணம் அடைந்திருப்பதாகவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 206 பேர் மரணம் அடைந்து தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும் அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியபோது, ‘கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு!

இதில் தி.மு.க. ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை! நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்!

Leave a Reply