நீட்தேர்வுக்கு எதிராக ஒரு கூட்டம் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மிக எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் பேட்டி அளித்தனர்

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று நீட்தேர்வு கேள்விகள் குறித்து ஆய்வு செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது

அந்த கட்டுரையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட 97% கேள்விகள் தமிழக அரசின் மாநில திட்டத்தின் கீழ் உள்ள பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழக அரசின் பாடங்களை நன்றாகப் படித்து இருந்தாலே 97 சதவீத கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியும் என்றும் அந்த கட்டுரை விவரிக்கின்றது

எனவே நீட் தேர்வு குறித்து தேவையில்லாத பயத்தை மாணவர்களுக்கு உருவாக்காமல் நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Leave a Reply