shadow

இந்திய நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு

9நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்கள் இடம் பெறுவது கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டு 5.5 சதவீதமாக இருந்த எண்ணிக்கை 2015-ம் ஆண்டு புள்ளி விவரங்கள்படி 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கிரெடிட் சூயிஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கிரெடிட் சூயிஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டு இடைக்கால அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. உயர் பொறுப்புகளில் பாலின சமத்துவ விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஆசிய பசிபிக் நாடுகள் கண்டு வருகின்றன. குறிப்பாக சர்வதேச விகிதாச்சாரமான 14.7 சதவீதத்துக்கு நெருக்கமாக இந்திய வளர்ச்சி உள்ளது என்று அந்த அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இயக்குநர் குழு அளவில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதால், பெண்கள் உயர் பொறுப்புகளுக்கு செல்வதி லும் சாதகமான போக்கு நிலவுவதாக கூறியுள்ளது.

நிர்வாக அளவில் பாலின சமத்துவ விகிதத்தில் இந்தியாவில் 2014-ம் ஆண்டில் இருந்து சிறிய சரிவு இருந்து வருகிறது என்றும், 2014-ல் 7.8%-மாக இருந்த இந்த விகிதம் 7.2 சதவீதமாக குறைந் துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிறுவனங் களின் இயக்குநர் குழுவில் பாலின சமத்துவ விகிதம் 2013 ம் ஆண்டு முடிவில் 12.7 சதவீதமாக இருந்தது. இது 2015-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி 14.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்கள் இடம் பெறும் விகிதத்தில் நார்வே முதலிடத்தில் உள்ளது. இங்கு பாலின சமத்துவ விகிதம் 46.7 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்து பிரான்ஸில் 34 சதவீத மும், ஸ்வீடனில் 33.6 சதவீதமும், இத்தாலியில் 30.8 சதவீதமும், பின்லாந்தில் 30.8 சதவீதமும் பாலின சமத்துவம் நிலவுவதாக அறிக்கை கூறுகிறது. ஆசிய பசிபிக் பிராந்திய அளவிலான 12 நாடுகளில் ஆஸ்திரேலியாவில் 20.1 சதவீத பெண்கள் உயர் பொறுப்புகளில் இருப்பதாக கூறியுள்ளது. இந்த ஆய்வுக்காக 3,000 நிறுவனங்களில் 27,000 இயக்குநர் குழு அளவிலான அதிகாரிகளிடத்தில் ஆய்வு நடத்தியுள்ளது

Leave a Reply