இந்திய ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்ஹ்டு இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து சீன இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது, இந்திய இராணுவம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி கடந்து, பாங்காங் ஏரியின் தென் கரையிலும், ஷென்பாவ் மலைப் பகுதியிலும் நுழைந்ததாகவும், இதனை சீனா கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்தியா தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சீனாவுடனான வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் சீனா இந்தியா மீது இவ்வாறு திடுக்கிடும் புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply