shadow

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டி-20: இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது.

இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்த போதிலும் கே.எல்.ராகுல் மற்றும் விராத் கோஹ்லி நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளனர்.

கே.எல்.ராகுல் 25 பந்துகளில் 35 ரன்களும் விராத் கோஹ்லி, 14 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்தியா சற்றுமுன் வரை 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply