இந்தியாவின் உறவை முறித்து கொள்வோம்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து தரும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 பிரிவை திரும்ப பெற்றால், இந்தியாவுடனான உறவை முறித்து கொள்ள தயங்க மாட்டோம் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்

370 பிரிவை நீக்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்றும், சட்டப்பிரிவு 370ஐ நீங்கள் நீக்கினால், மத்திய அரசுடனான உறவை முடித்துக் கொள்வோம்.
என்றும், அந்த சட்டப்பிரிவுதான் மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் இடையிலான பாலம் என்றும் கூறிய முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி இந்தியா எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி இணைத்துக் கொண்டது என்றும், தற்போது, அதனை திரும்பபெற நினைத்தால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply