‘இந்தியன் 2’ படத்திலும் அக்சயகுமார் வில்லனா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்த மாதம் முதல் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் அக்சயகுமார் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்தான் ‘2.0’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.