shadow

இணையதளங்களில் ஆங்கிலத்திற்கு போட்டியாக வளர்ச்சி அடைந்த பிராந்திய மொழிகள்

கடந்த 2017ம் ஆண்டில் இந்திய இணையதள வாசகர்களில் ஆங்கிலத்தில் அதிகமானோர் பொழுதுபோக்கு மற்றும் பிரபலமானவர்கள் குறித்த தகவல்களை அதிகம் விரும்பியுள்ளனர். அதேசமயம் ஹிந்தி மற்றும் பிற மொழி இணையதள வாசகர்கள் தேசிய, மத மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளை அதிகம் வாசித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியாவில் இணையதளங்களில் வாசகர்கள் விரும்பி வாசிக்கும் செய்தி குறித்து ‘ஸ்டோரிநாமிக்ஸ்’ என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2016ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2017ல் மக்களின் செய்தித் தேர்வில் மாற்றங்கள் தெரிகிறது. கடந்த ஆண்டு மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட 5,000 செய்திகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆங்கிலம், இந்தி, வங்காளம் உட்பட 10 மொழிகளில் அதிகம் வாசிக்கப்படும் 143 பிரபல நிறுவனங்களின் செய்தி இணைதளத்தில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இதில் ஆங்கிலத்திற்கு போட்டியாக ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி செய்தி இணைய தளங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. இந்த மொழிகளில் செய்திகளை வாசிப்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டில் மொத்த செய்திகளில் அதிகமாக தேசிய, மதம் சார்ந்த செய்திகள் வாசிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2017ம் ஆண்டு இந்த செய்திகள் வாசிப்பது 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் இந்திய இணையதள வாசகர்களில் ஆங்கிலத்தில் அதிகமானோர் பொழுதுபோக்கு மற்றும் பிரபலமானவர்கள் குறித்த தகவல்களை அதிகம் விரும்பியுள்ளனர். அதேசமயம் ஹிந்தி மற்றும் பிற மொழி இணையதள வாசகர்கள் தேசிய, மத மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளை அதிகம் வாசித்துள்ளனர்.

பேஸ்புக், லிங்க்டின், ட்வீட்டர் என சமூகவலைளதங்களில் அதிகம் பகிரப்படும் செய்திகளில் தொடர்ந்து முதலிடத்தில் ஆங்கில செய்திகள் உள்ளன. இருப்பினும் முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் ஆங்கிலத்தின் பங்களிப்பு 48.32 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக குறைந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள ஹிந்தி 34 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் வங்காளம் உள்ளது. அதன் பங்களிப்பு 6.97 சதவீதமாக உள்ளது. மற்ற மொழி இணைதளங்களின் பங்களிப்பு இதற்கு அடுத்த இடங்களில் உள்ளன.

எனினும் வாசகர்களால் அதிகம் பகிரப்படும் செய்திகளில் வரிசையில் ஆங்கிலத்தை விடவும், ஹிந்தி மற்றும் வங்காள மொழி செய்திகள் முன்னிலை பெற்றுள்ளன. ஆங்கில செய்தி சராசரியாக 487 பேரால் பகிரப்பட்டுள்ளது. ஆனால் ஹிந்தி 1,607 வாசகர்களால் பகிரப்பட்டுள்ளது. வங்காள மொழி செய்திகள் அதை விடவும் அதிமாக பகிரப்பட்டுள்ளது. அந்த மொழி செய்திகள் சராசரியாக 3,307 வாசகர்களால் பகிரப்பட்டுள்ளது.

இந்த மூன்று மொழிகளை தவிர மற்ற இந்திய மொழிகளின் மொத்த பங்களிப்பு 14.76 சதவீதமாக உள்ளது. இந்த மொழி செய்திகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 2 மடங்காக உயர்ந்துள்ளது.

இதுபோலவே சமூகவலைதளங்கள் தேடிச் சென்று மக்கள் செய்திகளை படிப்பதும் 33.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டில் சமூகவலைதளங்களில் மொத்தம் 376.63 கோடி செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply