இசைஞானியிடம் ஆட்டோகிராப் வாங்கிய செந்தில்-ராஜலட்சுமி

இசைஞானி இளையராஜாவிடம், தங்கள் ஹார்மோனியப் பெட்டி மீது ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்த பாடகர் செந்தில் கணேஷ், பாடகி ராஜலட்சுமி குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்களில் செந்தில் கணேஷ் ஒரு சில படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இசைஞானியிடம் அனுமதி பெற்று அவரிடம் தங்களுடைய ஹார்மோனிய பெட்டியில் ஆட்டோகிராப் வாங்கியுள்ளனர். மேலும் இசைஞானி இளையராஜா செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியினரை வாழ்த்தியுள்ளார்.

Leave a Reply