ஆஸ்திரேலியாவை சுருட்டிய ஆர்ச்சர்: 6 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தல்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய 2-வது நாளில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் 80 ரன்களும் லாபிசாங்கே 48 ரன்களும் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை 225 ரன்களுக்கு சுருட்டினார். மேலும் கர்ரன் 3 விக்கெட்டுகளையும் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து விளையாடி வருகிறது என்பதும், முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 294/10

பட்லர்: 70
ரூட்: 57
பர்ன்ஸ்: 47

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 225/10

ஸ்மித்: 80
லாபுசாங்கே: 48
லியான்: 25

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 9/0

பர்ன்ஸ் (அவுட் இல்லை): 4
டென்லே (அவுட் இல்லை) : 1

Leave a Reply