shadow

ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் படத்தில் அதர்வா?

நடிகர் ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை வசனம் எழுதி நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் கதை, திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கவுள்ளராம்.

இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியபோது, ‘பூமராங்’ படத்தின் படப்பிடிப்பின்போதுதான் நானும் அதர்வாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். நாங்கள் இருவரும் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது தான் எல்.கே.ஜி படம் தொடங்கும் ஐடியா எனக்கு வந்தது. மேலும் அதர்வாவுக்காக நான் ஒரு கதை சொல்லியுள்ளேன். அந்த கதை அவருக்கு ரொம்ப பிடித்துள்ளது. கூடிய விரைவில் அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தையும் எல்.,கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என கருதப்படுகிறது. இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிற்து

Leave a Reply