ஆன்லைனில் மெட்ரோ வாட்டர் பதிவு செய்வது எப்படி? சென்னை மக்களுக்கான தகவல்

சென்னை மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாக இருக்கும் மெட்ரோ வாட்டரை ஆன்லைனில் பதிவு செய்து பெறுவது எப்படி? என்பதை பார்ப்போம்

//chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள ‘புக் ஏ வாட்டர் டாங்கர்’ என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பின்பு தோன்றும் பக்கத்தில் முகவரி, பெறப் போகும் நீரின் கொள்ளளவு உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டும்.பின்பு ஓ.டி.பி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வழியாக மெட்ரோ நீர் புக்கிங் உறுதி செய்யப்படுகிறது. வெற்றிகரமாக புக் செய்யப்பட்டவுடன் பயனரின் செல்போனிற்கு ரகசிய எண் ஒன்று அனுப்பப்படுகிறது. மெட்ரோ நீர் வீட்டிற்கு கொண்டு வரப்படும் போது, ரகசிய எண்ணை பயனர்கள் தெரிவிக்க வேண்டும்

6000 லிட்டர் மெட்ரோ நீருக்கு, 475 ரூபாயும், 9 ஆயிரம் லிட்டர் மெட்ரோ நீருக்கு 700 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. பயனருக்களுக்கு உடனடியாக நீர் வேண்டும் பட்சத்தில் தட்கல் முறையில் பதிவுச் செய்யும் முறையும் உள்ளது. ஒருவருக்கு மெட்ரோ நீர் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன் அவர் ஏழு நாட்களுக்கு பிறகு மட்டுமே மீண்டும் மெட்ரோ நீரை பதிவு செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply