shadow

ஆந்திரா வங்கி நிகர லாபம் 72% சரிவு

andhrabankபொதுத்துறை வங்கியான ஆந்திரா வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 72 சதவீதம் சரிந்து 52 கோடி ரூபா யாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 185 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.

மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் 9 சதவீதம் உயர்ந்து 5,124 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4,699 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது. வாராக்கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை அதிகரித்ததால் நிகர லாபம் சரிந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 633 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு ஒதுக்கப்பட்டது. இப்போது 1,023 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வங்கியின் நிகர வாராக்கடன் 4.61 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 2.93 சதவீதமாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 540 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் முந்தைய 2014-15ம் நிதி ஆண்டில் 638 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. 2015-16-ம் நிதி ஆண்டில் நிகர வட்டி வரம்பு 3.18 சதவீதமாக இருக்கிறது.

மார்ச் காலாண்டில் 136 கோடி ரூபாய் மதிப்புள்ள முன்னுரிமை பங்குகளை எல்ஐசிக்கு ஆந்திரா வங்கி ஒதுக்கியது.

Leave a Reply