shadow

ஆட்சி அமைக்க பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யும்: மு.க.ஸ்டாலின்

மெஜாரிட்டி இல்லை என்றாலும் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பாஜக என்ன வேண்டுமானாலும் செய்ய துணியும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க, மதச்சார்பற்ற கட்சியின் தலைவர்கள் இணைய வேண்டும் என்பதை கர்நாடக தேர்தல் நிரூபித்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு மதச்சார்பற்ற கட்சிகள் செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் கர்நாடக மாநிலத்தில் கவர்னர் சட்டப்படி மெஜாரிட்டி உள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், அவர் எந்தமாதிரியான முடிவினை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply