shadow

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் இணைப்பு

2022 ஆம் ஆண்டு நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கடந்த 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டும் இடம் பெற்றிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறவில்லை

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், 2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் (Hangzhou) நகரில் நடக்கும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்துள்ளது. 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் டி20 கிரிக் கெட்போட்டி இணைக்கப்பட்டுள்லது என்று இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் மூலம் முறைப்படித் தெரியப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்

Leave a Reply