ஆக்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ காலமானார்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெகன் பிரசாத் உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 66. மறைந்த ஜெகன் பிரசாத் அவர்களுக்கு பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக எம்எல்ஏ ஜெகன் பிரசாத் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 1,35,120 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2012ஆம் ஆண்டு தேர்தலிலும் இவர் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.