shadow

அலுவலகத்தில் வேலை செய்பவரா நீங்கள்? இதை நிச்சயம் படியுங்கள்

அலுவலகத்தில் பணிபுரியும் பலருக்கு இருக்கும் பிரச்சனை டென்ஷன் மற்றும் மன அழுத்தம். இது ஏன் ஏற்படுகிறது? இதை சரி செய்து பணியில் சிறந்து விளங்குவது எப்படி?

செயல்திட்டம்

எந்த பணிகளையும் திட்டம் போடாமல் செய்தால் வீண் டென்ஷன் ஏற்படும். அதிலும் பணிகள் அதிகளவில் குவிந்திருக்கும் போது நேர அவகாசத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகள், முக்கிய மேலதிகாரிகளின் பணிகள், உங்கள் உறுதுணை தேவைப்படும் பணிகள் என பிரித்து கொண்டு செய்யலாம்.

அடுத்தவர்கள் பங்களிப்பு

கூட்டு முயற்சி எப்போதும் வெற்றியை தரும். பணிகள் அதிகமாக இருப்பின் அதை மற்றவர்களுடன் பங்கிட்டு கொண்டு செய்து முடிக்கலாம். எல்லாரும் எல்லாவற்றையும் செய்து விட இயலாது என்பதை மறவாதீர்கள்.

கவனம் மற்றும் திறமை

கடின உழைப்புக்கு மாற்றாக இருப்பது தான் திறமையும் அறிவுகூர்மையும் தான். இதை கொண்டு வேலையை எளிதாக முடிக்க வேண்டும். அதே போல முக்கிய வேலைகளுக்கு நேரத்தை செலவிட்டால் பணியிடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும்.

ஓய்வு

வேலை முக்கியம் தான். அதற்காக அதிலேயே முழ்கி போகக்கூடாது. நண்பர்களுடன் பேசுவது, பணியிடத்தை விட்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்து விட்டும் வருவது போன்றவைகள் மனதை ரிலாக்சாக வைக்க உதவும்.

Leave a Reply