shadow

உலகில் நிறைய அரிசி வகைகள் உள்ளன, அவை நம் நாட்டின் பல்வேறு வகையான அரிசியின் வெவ்வேறு பெயர்கள் உள்ளன.அவற்றில் சிவப்பு அாிசி, கருப்பு அாிசி மற்றும் பழுப்பு அாிசி ஆகியவை அதிக சத்து நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்த அாிசிகளில் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் உள்ளன. வெள்ளை அாிசியோடு இவற்றை ஒப்பிட்டுப் பாா்க்கும் போது, இந்த அாிசிகளில் நாா்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அதிகம் இருக்கின்றன.

வெள்ளை அாிசியில் உள்ள மிக முக்கிய குறைபாடு என்னவென்றால், வெள்ளை அாிசியானது மிக அதிகமாகப் பதப்படுத்தப்படுகிறது. அவ்வாறு அதிகமாகப் பதப்படுத்துவதன் காரணமாக அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. இதனால் மற்ற அாிசிகளைவிட வெள்ளை அாிசியில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கின்றன. மேலும் வெள்ளை அாிசி சாதத்தைச் சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைந்த உணா்வு தோன்றாது.

நாம் எந்த வகையான அாிசியை சாப்பிட்டாலும், அதை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அாிசியில் பொதுவாக கலோாிகள் அதிகம் இருக்கும். ஆகவே அாிசி சாதத்தை அதிகம் உண்டால் அது நமது உடலுக்கு நல்லது அல்ல.

1 பழுப்பு அாிசி : வெள்ளை அாிசியைப் போல் அல்லாமல், பழுப்பு அாிசியில் குருனையும், உயிா்ச்சத்தும் உள்ளன. அதனுடைய உமி மட்டும் நீக்கப்படும். ஆகவே வெள்ளை அாிசியை விட, பழுப்பு அாிசியில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. பழுப்பு அாிசி குருனையில் ஃபிளேவனாய்டு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், அபிஜெனின், குவா்செடின் மற்றும் லூடியோலின் போன்றவை உள்ளன. இவை நாம் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க உதவி செய்கின்றன. வெள்ளை அாிசியில் இருக்கக்கூடிய அதே அளவிலான கலோாிகளும், காா்போஹைட்ரேட்டுகளும் பழுப்பு அாிசியில் இருக்கின்றன. ஆனால் வெள்ளை அாிசியைவிட, பழுப்பு அாிசியில் நாா்ச்சத்தும், புரோட்டீனும் அதிகம் உள்ளன. அதனால் வெள்ளை அாிசியை விட, பழுப்பு அாிசி நமக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகின்றன. பழுப்பு அாிசி சோற்றைக் குறைவாக சாப்பிட்டாலே, நமது வயிறு நிறைந்துவிடும். இந்த அாிசி நமது இரத்தத்தில் உள்ள இரத்தம் மற்றும் இன்சுலினை சீா்படுத்துகிறது. அதோடு இந்த அாிசியில் மக்னீசியமும் அதிகம் உள்ளது.

2 கருப்பு அாிசி:கருப்பு அாிசியானது ஊதா அாிசி அல்லது தடை செய்யப்பட்ட அாிசி என்று கருதப்படுகிறது. கருப்பு அாிசியில் உள்ள குருனையில் ஃபைட்டோகெமிக்கல்ஸ் இருப்பதால், அவை இந்த அாிசிக்கு கருப்பு அல்லது ஊதா நிறத்தை வழங்குகிறது. கருப்பு அாிசியில் புரோட்டீன், நாா்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் அதிகம் உள்ளன. கருப்பு அாிசியில் மற்ற வகை அாிசிகளைவிட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் இருக்கின்றன என்றும், இதில் சா்க்கரை உயா்த்தல் குறியீடு குறைவாக இருக்கிறது என்றும் ஆய்வுகள் தொிவிக்கின்றன. தனிநிலை எலெக்ட்ரான்களால் உடலில் உள்ள செல்கள் பாதிப்பு அடைந்து அதன் மூலம் நாள்பட்ட நோய்களான புற்று நோய்கள் மற்றும் மனக்கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் கருப்பு அாிசியில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், தனிநிலை எலெக்ட்ரான்களால் பாதிக்கப்படும் செல்களைப் பாதுகாக்கின்றன. 100 கிராம் கருப்பு அாிசியில் 335 கலோாிகள் உள்ளன. எனினும் உடல் எடையைக் குறைக்க முயல்பவா்களுக்கும், இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவைக் குறைக்க விரும்புவோருக்கும், கருப்பு அாிசியானது ஒரு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

3 வெள்ளை அாிசி :பொதுவாக இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் வெள்ளை அாிசி சமைக்கப்படுகிறது. நாம் ஏற்கனவே சொன்னது போல் மற்ற அாிசிகளைவிட வெள்ளை அாிசியானது அதிகமாக பதப்படுத்தப்படுகிறது. அவ்வாறு பதப்படுத்தப்படும் போது வெள்ளை அாிசியில் இருக்கும் உமி மற்றும் குருனை போன்றவை நீக்கப்படும். மேலும் பொட்டலம் போடும் போது, அந்த அாிசி நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றில் உள்ள கிருமிகள் நீக்கப்படும். இவ்வாறு வெள்ளை அாிசியை அதிகமாகப் பதப்படுத்தும் போது அதில் இருக்கும் முக்கிய உயிா்ச்சத்துகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. அதனால் புரோட்டீன், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், தியாமின் மற்றும் வைட்டமின் பி சத்துகள் போன்றவை மற்ற அாிசிகளில் இருப்பதைவிட, வெள்ளை அாிசியில் மிகவும் குறைவாக இருக்கின்றன. மேலும் வெள்ளை அாிசியில் நாா்ச்சத்து குறைவாக இருப்பதால், நமது வயிறு நிறைவதற்கு வெள்ளை அாிசி சோற்றை நாம் அதிக அளவு சாப்பிட வேண்டும். 100 கிராம் வெள்ளை அாிசியில் 68 கலோாிகளும், 14.8 கிராம் காா்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. வெள்ளை அாிசியில் கால்சியம் மற்றும் ஃபோலேட் அமிலம் ஆகியவை மட்டுமே அதிகம் உள்ளன.

4 சிவப்பு அாிசி : சிவப்பு அாிசியில் இருக்கும் ஆந்தோசியனின் என்ற ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான், அந்த அாிசிக்கு சிவப்பு நிறத்தை வழங்குகிறது. பழுப்பு அாிசியைப் போலவே சிவப்பு அாிசியில் அதிக அளவிலான நாா்ச்சத்து உள்ளது. அதோடு சிவப்பு அாிசியில் கணிசமான அளவு இரும்புச்சத்து இருக்கிறது. அதனால் இது நமது உடல் வீக்கம் அல்லது அலா்ஜி மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்க உதவி செய்யும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோா், சிவப்பு அாிசியை சாப்பிடலாம். ஏனெனில் சிவப்பு அாிசியானது சொிப்பதற்கு, நீண்ட நேரம் ஆகும். அதனால் நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்கலாம். அதன் மூலம் தேவையற்ற, ஆரோக்கியமில்லாத பிற உணவுகளைச் சாப்பிடாமல் தவிா்க்கலாம். 100 கிராம் சிவப்பு அாிசியில் 455 கலோாிகள் உள்ளன. சிவப்பு அாிசியில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் உள்ளதால், தற்போது பலா் இந்த அாிசியை விரும்பி உண்கின்றனா். சிவப்பு அாிசியில் ஆந்தோசியனின், அபிஜெனின், மிாிசெடின் மற்றும் குவா்செடின் போன்ற ஃபிளேவனாய்டுகளும் உள்ளன. சிவப்பு அாிசியானது புற்றுநோய் செல்களின் வளா்ச்சியைக் குறைப்பதில் உதவி செய்கிறது. மேலும் நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் குறைக்கிறது.

உலகில் பலவகையான :அாிசிகள் இருந்தாலும், கருப்பு அாிசி, சிவப்பு அாிசி மற்றும் பழுப்பு அாிசி ஆகியவை ஊட்டச்சத்து மிகுந்த அாிசிகள் என்று கருதப்படுகின்றன. வெள்ளை அாிசியை விட இந்த அாிசிகளில் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், நாா்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வெள்ளை அாிசியில் உள்ள மிக முக்கிய குறைபாடு என்னவென்றால், வெள்ளை அாிசியானது மிக அதிகமாகப் பதப்படுத்தப்படுகிறது. அவ்வாறு அதிகமாகப் பதப்படுத்துவதன் காரணமாக அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. இதனால் மற்ற அாிசிகளைவிட வெள்ளை அாிசியில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கின்றன. மேலும் வெள்ளை அாிசி சோற்றைச் சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைந்த உணா்வு தோன்றாது. நாம் எந்த வகையான அாிசியை சாப்பிட்டாலும், அதை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அாிசியில் பொதுவாக கலோாிகள் அதிகம் இருக்கும். ஆகவே அாிசி சோற்றை அதிகம் உண்டால் அது நமது உடலுக்கு நல்லது அல்ல.