அரசியலில் குதித்த கோவை சரளா? எந்த கட்சியில் இணைந்தார் தெரியுமா?

தேர்தல் சீசனில் கோலிவுட் திரையுலகினர் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து பிரச்சாரத்திற்கு செல்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று பிரபல நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே இந்த கட்சியில் நாசர் மனைவி கமீலா, ஸ்ரீப்ரியா, சினேகன் போன்ற திரையுலகினர் இருந்து வரும் நிலையில் தற்போது அதில் கோவை சரளாவும் இணைந்துள்ளார்.

கோவை சரளா, கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply