shadow

அம்மா ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன்: குமரியில் பிரதமர் மோடி பேச்சு

இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய பாம்பன் இணைப்பு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் சென்னை எழும்பூர் – மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களை துவக்கியும் வைத்தார் பிரதமர் மோடி. மேலும் மார்த்தாண்டபுரம் – பார்வதிபுரம் மேம்பாலங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதன்பின் வணக்கம் என்று தமிழில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ‘அம்மா ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து என் உரையை தொடங்குகிறேன் என்று கூறினார்.

மக்கள் விரும்புவது பாதுகாப்பை என்றும் அச்சத்தை அல்ல என்றும், மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை, வாக்கு அரசியலை அல்ல என்றும் கூறிய பிரதமர் மோடி மீனவர்களுக்கான திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக பெருமையுடன் கூறினார். 

மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை, முன்னேற்றத்தையும், நேர்மையான அரசியலையும் விரும்புகிறார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, மக்களின் வாக்குகளை பெற்ற முந்தைய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் கடனை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள் என்றும் காங்கிரஸ் அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். மேலும் லீப் ஆண்டு வருவது போல், விவசாயிகளுக்கான காங்கிரசின் திட்டமும் வரும் என்றும் அவர் கிண்டல் செய்தார்.

 

Leave a Reply