’அம்மா’ என்று அழைத்த 20 வயது மகன்! நெகிழ்ந்து போன தாய்!

இருபது வருடங்களுக்கு முன் தொலைந்த தனது குழந்தையை நேரில் பார்த்த ஒரு தாய் அந்த குழந்தை தன்னை அம்மா என்று அழைத்த கணத்தில் நெகிழ்ந்துபோய் கலங்கிய ஒரு சம்பவம் சென்னையில் நடந்தபோது

சென்னையைச் சேர்ந்த நாகேஸ்வரராவ்-சிவகாமி தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை கடந்த 1999ஆம் ஆண்டு காணாமல் போனது. அந்தக் குழந்தை பல்வேறு இடங்களில் கைமாறி கடைசியில் அமெரிக்க தம்பதியரின் கையில் கிடைத்தது. அவர்கள் அந்த குழந்தையை அவினாஷ் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்

இந்த நிலையில் தனது குழந்தை காணாமல் போனதை கண்டு பிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் சிவகாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்தபோது இந்த வழக்கு சிபிஐக்கு மாறியது. சிபிஐ பல்வேறு வகையில் விசாரணை செய்ததில் அந்த குழந்தை தற்போது 20 வயது வாலிபனாக அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது

பின்னர் ரத்த சோதனை செய்ததில் சிவகாமியின் மகன் தான் அவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து தான் சொந்த பெற்றோரை பார்ப்பதற்காக அவினாஷ் சென்னைக்கு வந்தார்

அவருக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. அவரது பெற்றோருக்கும் ஆங்கிலம் தெரியாது. இந்த நிலையில் தமிழில் அவர் ’அம்மா’ என்று சிவகாமியை அழைத்ததும் சிவகாமி நெகிழ்ந்துபோய் கண்ணீர் தனது மகனை கட்டி அணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply