shadow

அம்மாவை பாடகியாக்கிய பிரபல இசையமைப்பாளர்.
santhosh1
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’, விஜய் நடிக்கவுள்ள ‘விஜய் 60’ உள்பட சுமார் பத்து படங்களுக்கு மேல் இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு தனது தாயாரை ‘இறைவி’ படத்திற்காக ஒரு பாடலை பாட வைத்துள்ளார்.

பெண்களின் சக்தி குறித்து எழுதப்பட்ட இந்த பாடலை தனது அம்மாவையே பாட வைக்க சந்தோஷ் நாராயணன் முடிவு செய்தபோது அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் அனுமதி கொடுக்கவே, இன்று இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பாடலுடன் ‘இறைவி’ படத்தின் பாடல்களின் பணி முடிந்துவிட்டதாகவும், பின்னணி இசை பணிகள் இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, கமாலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.

Leave a Reply