அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

ஏற்கனவே டிரம்ப், மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென மாடல் அழகி ஒருவர் அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்

முன்னாள் மாடல் அழகியான ஏமி டோரீஸ் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த 1997ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரங்கில் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிபர் டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply