shadow

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் ஆசிய சுற்றுப்பயணம்

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்தியாவுக்கு அவருடைய பயண திட்டம் இல்லையென்றாலும் ஜப்பான், சீனா, தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள பிரச்சனைகள் தற்போது முற்றியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்ற சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் கிழக்காசிய நாடுகளுக்கு முதன் முறையாக அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது சுற்றுப்பயணத்தில் ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம் நாடுகள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகொரியாவின் மிக அருகில் உள்ள அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டு வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சீனா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு செல்லும் அவர் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. நவம்பர் 3-14 தேதிகளில் அவரது சுற்றுப்பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனது மனைவி மெலினா டிரம்ப்-ஐயும் அவர் அழைத்துச் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply