59 சீன செயலிகளுக்கு தடை

டிக்டாக், ஹலோ, யூசி புரௌசர் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் கூட எடுக்க தயங்கிய இந்த தடையை முதலில் இந்தியா விதித்து சீனா என்ற பூனைக்கு இந்தியா மணி கட்டியுள்ளது

இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மத்திய அரசின் உத்தரவின்படி டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Leave a Reply