shadow

அமெரிக்காவை புரட்டி போட்ட இர்மா புயல்: வலுக்குறையாமல் நகர்வதால் பதட்டம்


வடகொரியா மட்டுமின்றி இயற்கையும் அவ்வப்போது அமெரிக்காவை பயமுறுத்தி வரும் நிலையில் இர்மா புயல் நேற்று கோரத்தாண்டவம் ஆடி புளோரிடா கரையைக் கடந்தது.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த இர்மா புயல் சில நாட்களுக்கு முன் உருவாகி நேற்று மணிக்கு. 220 கி.மீ வேகத்தில் சுழற்றி அடித்தது. இந்த புயலால், புளோரிடா மாகாணமே தடுமாற்றம் அடைந்தது.

புயல் காரணமாக 60 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் இதுவரை உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை. இருப்பினும் மீட்புப் பணிகளுக்கு ராணுவம் தயார் நிலையில் உள்ளது. புயல் தொடர்ந்து வலுவாக இருப்பதால், மீட்புப் பணிகளை தொடங்க முடியவில்லை.

இர்மா புயலால் ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், இர்மா புயல் நேற்று மாலைக் கரையைக் கடந்தது. குறிப்பாக, இந்தப் புயல் சற்றும் வலுக்குறையாமல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

Leave a Reply