அமெரிக்காவில் தொடரும் கொரோனா கோரத்தாண்டவம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 1,52,872 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

மேலும் அமெரிக்காவில் 24 மணிநேர்த்தில் 1,191 பேர் கொரோனாவால் மரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இத்தாலியில் 24 மணிநேர்த்தில் 672 பேர் பலியாகியுள்ளனர்.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,35,66,424 என்றும், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,73,380 என்றும், உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,39,45,653 என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

Leave a Reply