உலகம் முழுவதும் போராட்டம் வெடித்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் சமீபத்தில் ஜார்ஜ் ஃபிளையாட் என்ற 46 வயது கருப்பின நபர் அமெரிக்க போலீசாரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் செய்ததால் அவர்களை அடக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இதுவரை 17ஆயிரம் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அமெரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் உலகம் முழுவதும் தற்போது போராட்டங்கள் நடத்தப்படுகின்றன

குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள லண்டனிலும் ஜெர்மனியில் உள்ள பெர்லினிலும், ஜார்ஜ் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கருப்பினத்தவர் மீது பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று அவர்கள் போராட்டம் செய்து வருகின்றன அமெரிக்காவில் ஆரம்பித்த போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply