அமித்ஷாவை சந்தித்த புதுவை முதல்வர் நாராயணசாமி!

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது புதுவைக்கு வரவேண்டிய நிதி மற்றும் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து அமித்ஷாவிடம் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அமித்ஷா, கூடிய விரைவில் புதுவைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

Leave a Reply