shadow

அமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்

இந்தியாவில் மீடூ குற்றச்சாட்டுக்கள் மிக வேகமாக பரவி வருவதால் பல பிரபலங்கள் தங்களுடைய பெயர் அதில் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். பெண்கள் தைரியமாக பெரிய பிரபலங்கள் பெயரையும் ‘மீடூ’வில் இணைத்து வருவதால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல ஹேர்ஸ்டைல் கலைஞர் சப்னா மோடி பவனானி என்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மீது ‘மீடூ’ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, ‘அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த பெண்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சப்னா மோடி பவனானி இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீடூ குறித்து ஆதரவு தெரிவித்த அமிதாப் மீதே மீடூ குற்றச்சாட்டா? என்று பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply