அமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமமுக இனி இருக்காது என்றும் அங்கிருந்து ஒவ்வொருவராக அதிமுகவிற்கு வந்துவிடுவார்கள் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மேலும் தங்க தமிழ்ச்செல்வனை ஏற்பது பற்றி முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்
தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் அதிமுக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தங்க தமிழ்ச்செல்வனை அடுத்து ஒவ்வொருவராக அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள் என்றும் அமமுக இனி அவ்வளவுதான் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply