அப்பாவுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம்

’தும்பா’ என்ற படத்தில் நடிகையும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனும் மகளுமான கீர்த்திபாண்டியன் தற்போது சூப்பர் ஹிட் மலையாள திரைப்படமான ஹெலன் என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் அவரது அப்பா கேரக்டரில் அவருடைய சொந்த அப்பாவான அருண்பாண்டியன் நடிக்க உள்ளார் என்பதும், அருண்பாண்டியன் இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இந்த படத்தை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply