சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக மிக எளிதில் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது

ஆனால் கேதார் ஜாதவ்வின் மோசமான ஆட்டத்தால் சிஎஸ்கேஅணி தோல்வி அடைந்தது இந்த நிலையில் இன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கேதார் ஜாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார்

கேதார் ஜாதவ் அணியில் இருந்தால் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடையும் என்று பல விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக ஜெகதீசன் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது சென்னை அணி 7-வது முறையாக மீண்டும் சேஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply