அனுஷ்காவின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக இருந்து வரும் அனுஷ்கா, தற்போது சுவாமி அய்யப்பன் குறித்த ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்
இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அதேபோல், இந்த படத்தை ஸ்ரீகோகுலம் கோபாலன் என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இந்த படம் இதுவரை வெளிவராத வகையில் பிரமாண்டமான அய்யப்பன் படம் என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பல கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.