shadow

அந்த ஒரே ஒரு காட்சி நச்சென்று இருக்கும்: கீர்த்திசுரேஷ்

விஷாலுடன் கீர்த்திசுரேஷ் நடித்த ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குறிப்பாக விஷாலின் 25வது படத்தில் நடித்தது மகிழ்ச்சி என கூறிய கீர்த்திசுரேஷ் மேலும் கூறியதாவது:

‘சண்டைக்கோழி 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயக்கத்துடன் தான் வந்தேன். ஆனால் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ஏனென்றால், முதல் பகுதியில் மீரா ஜாஸ்மின் சிறப்பாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். இயக்குநர் லிங்குசாமி கதைக் குறும்போதே நடித்தும் காட்டுவார். கதாநாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு ஒரு சில படங்களில் மட்டுமே அமையும். இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பை இயக்குநர் லிங்குசாமி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

ராஜ்கிரணுடன் ரஜினிமுருகனில் நடித்திருக்கிறேன். ஆனால் இருவருக்கும் அவ்வளவாக காட்சிகள் இல்லை. இந்தப் படத்தில் ஒரே ஒரு கட்சியென்றாலும் நச்சென்று இருக்கும்.

வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது. அந்தளவு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மதுரை தமிழை எப்படி பேச வேண்டுமென்று பிருந்தா சாரதி கற்றுக் கொடுத்தார். முதல் இரண்டு மூன்று நாட்கள் உடல் மொழியுடன் பேசி நடிக்க சிரமம் இருந்தாலும், என்னால் முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டப்பிங் பேசியிருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜாவுடன் முதல் படம். இப்படத்தில் இடம்பெறும் ‘கம்பத்து பொண்ணு’ பாடல் என்னுடைய அபிமானப் பாடல். என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. விஷாலின் 25வது படத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

Leave a Reply