shadow

அதிமுக, பாமக கூட்டணி: பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு என அறிவிப்பு

மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக இணைந்து, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபோக ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதேபோல் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஒப்பந்தமாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இணையவுள்ளது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லாத நிலையில் திடீரென அதிமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply