shadow

அதிமுக-பாமக கூட்டணிக்கு வைகோ ஆதரவா?

அதிமுக-பாமக கூட்டணி இன்று முடிவானதும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கட்சியின் தலைவர்கள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பாமகவின் சந்தர்ப்பவாதத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருப்பதாக தனக்குத்தானே கூறிக்கொண்டு வரும் வைகோ, அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கூறியபோது, “சமூக நீதிக்காக போராடியவர் ராமதாஸ் என்று, கூட்டணி வைப்பது குறித்து விமர்சித்தால் இந்தியாவில் எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் நான் பொதுவாக மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வதில்லை என்பதால் இந்த கூட்டணி குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இடம் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் மரியாதைக்குரிய எண்ணிக்கையில் தொகுதி கிடைக்குமா? என்ற கேள்விக்கு இன்னும் ஓரிரு நாட்களில் விடை தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

 

Leave a Reply