shadow

அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள்: தினகரன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சி கவிழ்ப்பதை திமுக எம்.எல்.ஏக்கள் கூட விரும்பவில்லை என்று நேற்று அமைச்சர் ஜெயகுமார் கூறியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதனையடுத்து ஐந்து வருடங்கள் எம்.எல்.ஏ பதவியை காப்பாற்றும் நோக்கில் திமுக எம்.எல்.ஏக்கள் செயல்பட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஒருசில மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தினகரன் தெரிவித்தார். எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக என மூன்று அணிகள் போட்டியிடும் என தெரிகிறது

 

Leave a Reply